-0.7 C
New York
Tuesday, December 30, 2025

பாடசாலையில் தீவிபத்து – மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Lenzburg இல் உள்ள Mühlematt பாடசாலையில் இருந்து தீவிபத்து ஏற்பட்டதால்,  அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக   Aargau  பொலிசார் தெரிவித்தனர்.

பாடசாலையின் கீழ்த் தளத்தில் உள்ள களஞ்சிய அறையில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

உடனடியாக தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டு தீயைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாரேனும் வேண்டுமென்றே தீவைத்தனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாடசாலை நேற்று வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles