16.6 C
New York
Thursday, September 11, 2025

முன்னாள் நீதிபதி பாலியல் குற்றவாளியாக அறிவிப்பு.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Graubünden நிர்வாக நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் முன்னாள் பயிற்சியாளரை அச்சுறுத்திய குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

Plessurஇல்  உள்ள பிராந்திய நீதிமன்றம் அவருக்கு 23 மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட பிராந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பில், இப்போது, 27 வயதான முன்னாள் பயிற்சியாளரின் சாட்சியம் “நம்பகமானது” என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.

எனவே முன்னாள் நிர்வாக நீதிபதிக்கு 23 மாத சிறைத்தண்டனையும் 5,400  பிராங்  அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டும் நன்னடத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர், 2,300 பிராங் அபராதமும் செலுத்த வேண்டும்.

மூலம் – Swiss info

Related Articles

Latest Articles