-0.5 C
New York
Tuesday, December 30, 2025

இராணுவ வாகனங்கள் விபத்து- தடைப்பட்டது ஏ9 நெடுஞ்சாலை.

Sion இற்கும் Sierreஇற்கும் இடையே ஏ9 நெடுஞ்சாலையில் இரண்டு இராணுவ ட்ரக்குகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக Valais  கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரின் கனரக டாங்குகளை ஏற்றிக் கொண்டு வந்த  பாரிய ட்ரக் வண்டிகளே விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தினால் ஒரு ட்ரக்கில் இருந்த டாங்க் ஒன்று விலகிய போதும் அது நிலத்தில் விழவில்லை.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதும், குறித்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles