23.5 C
New York
Thursday, September 11, 2025

Aargau வாக்காளர்களின் வயதெல்லையை 16 ஆகக் குறைக்கும் யோசனை நிராகரிப்பு.

சுவிட்சர்லாந்தின் Aargau கன்டோனில்  வாக்காளர்கள், வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச  வயது எல்லையை  18 இல் இருந்து 16 ஆகக் குறைப்பதற்கான முயற்சியை  மக்கள் நிராகரித்துள்ளனர்.

கன்டோனில் உள்ள வாக்காளர்களில்  79.7%  வீதமானோர்  இந்த முயற்சியை நிராகரித்துள்ளனர்.  

இது தொடர்பான பொது வாக்கெடுப்பில், 42% க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்தது என கன்டோனல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 வயதுக்கு மேற்பட்டவர்களை கன்டோனல் மற்றும் நகரசபை தேல்தல்களில் வாக்களிக்க அனுமதிப்பதன் மூலம், கன்டோனல் அரசியலமைப்பை திருத்துவதற்கு  முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சுவிஸ் மக்கள் கட்சி (வலதுசாரி) தவிர, பல இளம் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

மூலம்-  swissinfo

Related Articles

Latest Articles