4.4 C
New York
Monday, December 29, 2025

தாவர உணவுகளுக்கு இறைச்சி பொருட்களின் பெயரை பயன்படுத்த தடை.

இறைச்சி பொருட்களின் பெயர்களில், தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு, விளம்பரம் செய்வதற்கு Valais  கன்டோனில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்கு ஆதரவாக Valais  கிரான்ட் கவுன்சில் வாக்களித்துள்ளது.

SVP, FDP மற்றும் மத்திய கட்சிகளின் பிரதிநிதிகளால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்பு ஆதரவாக 60 வாக்குகள் கிடைத்தன. 48 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.  11 பேர் வாக்களிக்கவில்லை.

இந்தத் தடையானது குறிப்பிட்ட தயாரிப்புகளின் விளம்பரத்திற்கு மட்டுமே பொருந்துமே தவிர, தயாரிப்புக்கு அல்ல.

Valais கிரான்ட் கவுன்சில் விளம்பரங்களைத் தடைசெய்ய, வாக்களித்துள்ள நிலையில், பொது இடங்களில், இறைச்சி இல்லாத பொருட்களைப் பெயரிட விலங்குகள் தொடர்பான சொற்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு கன்டோனல் சட்டத் திருத்தத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles