0.9 C
New York
Thursday, February 12, 2026

கன்டோனல் தலைவர் பதவிக்கு Andreas Glarner மீண்டும் தெரிவு.

Aargau இல் SVPகட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் Andreas Glarner மீண்டும் கன்டோனல்  தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

கட்சியின் கன்டோனல் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு இது அறிவிக்கப்பட்டது.

62 வயதான  Andreas Glarner தனது அரசியல் பாணிக்காக கட்சிக்குள் பலமுறை விமர்சிக்கப்பட்டார்.

கட்சியின் தலைவர் பதவிக்கு, இவரும்,  இரண்டு துணை தலைவர்களும் மீண்டும் போட்டியில் நிற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல்  மாத இறுதியில் கட்சி மாநாட்டில் பிரதிநிதிகள் இவர்களின் நியமனங்களை முடிவு செய்வார்கள்.

2020 ஆம் ஆண்டு முதல் Andreas Glarner  கன்டோனல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

மூலம்- bluewin.ch

Related Articles

Latest Articles