21.6 C
New York
Friday, September 12, 2025

தபால் பேருந்துடன் மோதிய பெண்.

Chur உள்ள Deutsche Strasse இல் தபால் பேருந்து ஒன்றும் காரும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

நேற்று முன்தினம்மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர், தபால் பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிரோ மற்றொரு வாகனம் வருவதை அவதானித்து, அதனுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற போது, தபால் பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம்- www.polizeinews.ch

Related Articles

Latest Articles