5.3 C
New York
Tuesday, December 30, 2025

முற்றிலும் நீர்மின்சாரத்தில் இயங்கப் போகும் ரயில்கள்.

2025 ஜனவரி 1, ஆம் திகதி முதல், சுவிஸ் பெடரல் ரயில்வேயின் ரயில்கள், புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெறப்பட்ட மின்சாரத்தில் மட்டும் இயக்கப்படவுள்ளது.

முக்கியமாக நீர்மின்சாரம் மூலமே  ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதற்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரம் சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இருந்து சந்தையில் வாங்கப்படும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு,  2025 முதல் உத்தரவாத சான்றளிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரயில்களுக்கு சுமார் 90% மின்சாரம்,  நீர்மின் உற்பத்தி மூலமும்,  10% அணுசக்தியிலிருந்தும் பெறப்படுகிறது.

சுவிஸ் ரயில்வே இனி அணுசக்தி மின்சாரத்தை ரயில் இயக்கங்களுக்கு பயன்படுத்தாது, ஆனால் மின்சார சந்தையில் விற்பனை செய்யும்.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் பங்களிப்பது மற்றும் 2030 க்குள் பசுமை வீட்டு வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைப்பது இதன் நோக்கம்.

சுவிஸ் ரயில்வே 2040க்குள் பச்சை வீட்டு வாயு உமிழ்வை 90%க்கும் மேல் குறைக்க இலக்காகக் கொண்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles