லெபனானின், ஹிஸ்புல்லா அமைப்பை, தடை செய்ய கோரும் தீர்மானம் சுவிஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் நேற்று பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.
126 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாகம், 20 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 41 பேர் வாக்களிக்கவில்லை.
செனட் கடந்த வாரம் இதே மாதிரியான பிரேரணைக்கு 31 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த பிரேரணைகள் இப்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்.
ஹமாஸைப் போலவே ஹிஸ்புல்லாவும் ஒரு தீவிர இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகும், இது ஏராளமான வன்முறைச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பாகும் என பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு தனது பிரேரணையில் வாதிட்டது.
தற்போது சுவிட்சர்லாந்தில் அல்-கெய்தா மற்றும் ஐஎஸ் குழுக்கள் மட்டுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம், ஹமாஸைத் தடை செய்யும் கூட்டாட்சி சட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன.
மூலம்- swissinfo