Au, Wädenswil பாதசாரிக் கடவையில் வாகனம் மோதி இளம் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்து கொண்டிருந்த பெண் மீது கார் ஒன்று மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 21 வயதுடைய பெண் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min