30.1 C
New York
Wednesday, August 19, 2026

12 ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறக்க விரைவில் அனுமதி.

12 ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக நிலையங்களைத் திறப்பதற்கு கன்டோன்கள் அனுமதியளிக்க கூடிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

சூரிச் கன்டோன் முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய கவுன்சிலின் பொறுப்பான குழுவான, பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிவிதிப்பு குழு ஆதரவு வழங்கியுள்ளது.

நேற்று இதுபற்றிய வாக்கெடுப்பின் போது 15க்கு 9 என்ற அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பான ஒரு சட்ட முன்மொழிவை தயாரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது  வருடத்தில்  4 ஞாயிற்றுக்கிழமைகளில்  வணிக நிறுவனங்களைத்  திறந்திருக்க கன்டோன்களால்  அனுமதி அளிக்க முடியும்.

இதன 12 வாரங்களாக அதிகரிக்க சூரிச் கன்டோன் கோரிக்கை விடுத்திருந்தது.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles