Brig இல் உள்ள ஒரு தனிநபரின் பாதாள அறையில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Valais மற்றும் Vaud கன்டோனல் பொலிஸ் நிபுணர்களால் இந்த வெடிபொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
அவை அழிக்கப்படுவதற்காக, நேற்று பிற்பகலில் கொண்டு செல்லப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் குறித்து கன்டோனல் பொலிசார் எந்த விபரங்களையும் வழங்கவில்லை.
வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, காலை 10 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை Bahnhofstrasse போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத் துறை, பொலிசார் அம்புலன்ஸ் உதவியுடன் குவிக்கப்பட்டிருந்தனர்.
மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாததால் குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min