Oberwinterthur ரயில் நிலையத்தில் உள்ள ZKB ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை மீளப் பெற்றவர் மீது பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டு, அவரிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
21 வயதுடைய ஒருவர் ஏடிஎம்மில் பணத்தை எடுத்துக் கொண்டு தனது காருக்குத் திரும்ப முற்பட்ட போதே அவர் மீது பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டு, பணம் கொள்ளையிடப்பட்டது.
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்று விட்டார்.
அவருடன் பெண் ஒருவரும் காணப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளியை கண்டறிய Winterthur பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
மூலம்- 20min