-1.3 C
New York
Wednesday, December 31, 2025

கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் வீடுகளை பார்வையிட அனுமதி.

Graubünden இல் உள்ள Brienz/Brinzauls என்ற மலைக்கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், நாளை இரண்டு மணி நேரம் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

பாறைகள் சரியும் ஆபத்து இருப்பதால், கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் கடந்த நொவம்பரில் வெளியேற்றப்பட்டனர்.

பாதுகாப்பு நிலைமையை புவியியலாளர்கள் நாளை காலையில் சரிபார்த்த பின்னர் 2 மணிநேரம் மட்டும் வீடுகளை பார்வைலயிட அனுமதி வழங்கப்படும்.

முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,  அவசரநிலை ஏற்பட்டால் அபாய ஒலி எழுப்ப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து கடந்த நொவம்பர் மாதம் வெளியேறிய பலர் தனிப்பட்ட பொருட்களை சேகரிக்க விரும்புகிறார்கள் அல்லது நீண்ட காலமாக தங்கள் வீட்டைப் பார்க்க விரும்புகிறார்கள்.

கிராமத்திற்குத் திரும்புவது எப்போது சாத்தியமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles