பெப்ரவரி 3 முதல் 9 வரையான- கடந்த வாரத்தில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
முந்தைய வாரத்தில் 2,912 காய்ச்சல் பதிவுக்ள இருந்தபோதிலும், கடந்த வாரத்தில் அது 2,383 ஆக குறைந்துள்ளதாக மத்திய பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) தரவுகள் காட்டுகின்றன.
அதேவேளை “இன்ஃப்ளூயன்ஸா செயல்பாடு அதிகமாகவே உள்ளது. காய்ச்சல் அலையின் உச்சத்தை இன்னும் கடக்கவில்லை” என்று பொது சுகாதாரத்திற்கான மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், 100,000 மக்களுக்கு அதிகபட்சமாக யூரி மாகாணத்தில் 79.9 காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகின.
டிசினோ (46.13 வழக்குகள்) மற்றும் பாஸல்-ஸ்டாட் (42.99 வழக்குகள்) ஆகியவையும் பதிவாகியுள்ளன.