ஜெர்மனியின் Munich நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது காரால் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
போராட்டக்காரர்களின் கூட்டத்திற்குள் கார் புகுந்ததால் 28 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காரை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரது தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.