Dietikon க்கும் Berikonக்கும் இடையிலான ரயில் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த காரினால், S17 பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நேற்றுமாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அடையாளம் காணப்படாதவர்கள் ரயில் பாதையில் காரினை நிறுத்தி விட்டுச் சென்றிருந்தனர்.
அந்த வழியாக வந்த ரயில் உடனடியாக சில மீற்றர்கள் தொலைவில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதுகுறித்து சூரிச் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூலம்- 20min.