Basel இல் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து கொள்ளையிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இரண்டு பேர் கார் ஒன்றை தொலைபேசி விற்பனை நிலையத்தின் கண்ணாடிக் கதவின் மீது மோதி அதனை நொருக்கிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கிருந்த தொலைபேசிகளை திருடிக் கொண்டு அவர்கள் கால்நடையாகத் தப்பிச் சென்றனர்.
கொள்ளையை அவதானித்தவர்கள் அளித்த தகவலின் பேரில் Basel-Stadt உடனடியாக செயற்பட்டு, திருடர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
38 மற்றும் 34 வயதுடைய இரண்டு அல்ஜீரியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மூலம்- 20min