Küsnacht மற்றும் Winterthur இல் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்துக்களில், இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.
Küsnacht இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்றிரவு 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து புகையை சுவாசித்து பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் சமையலறையில் தீப்பற்றியதாகவும், அங்கு சில சந்தேகத்திற்கிடமான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, Winterthur இல் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பல குடும்பங்கள் வாழும் இந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பின்னாலும் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தீவிபத்துக்களால் பெருமளவில் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மூலம்- 20min