St.Gallen பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக்காலை 10 மணி வரையான காலப்பகுதியில், 50 வரையான விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
பனிப்பொழிவினால் வீதிகள் மோசமான நிலையில் இருப்பதால், அதிக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குளிர்கால சூழ்நிலைகளில் வாகனங்களை மெதுவாகவும் அவதானமாகவும் ஓட்டிச் செல்லுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
மூலம்- polizeinews.ch