சூரிச்சில் இருந்து Bellinzona நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், Gotthard Base சுரங்கப்பாதையில் திடீரென செயலிழந்து நின்றது.
தொழில்நுட்பக் கோளாறினால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4:20 மணியளவில் ரயில் திடீரென மிகவும் கடினமாக பிரேக் போட்டது. பின்னர் விளக்குகள் அணைந்தன.
இதையடுத்து மாலை 6 மணியளவில் ரயிலை விட்டு இறங்கி, இரண்டாவது சுரங்கப் பாதையில் நடந்து செல்லுமாறு பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
பயணிகளை பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டாவது சுரங்கப்பாதையில் கால்நடையாக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்கள் மற்றொரு ரயிலில் ஏறி, Bellinzonaவை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.
இரண்டு மணி நேரம் தாமதமாகவே பயணிகள் Bellinzonaவை சென்றடைய நேரிட்டதாக SBB உறுதிப்படுத்தியுள்ளது.
மூலம்- 20min