Herzogenbuchsee இல் உள்ள Zürichstrasse இல் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பெர்ன் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில், ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி தவறான பக்கத்தினால் பயணம் செய்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், Zürichstrasse பல மணிநேரம் மூடப்பட்டது.
மூலம்- 20min.