Olten இல் வர்த்தக நிலையம் ஒன்றில் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வர்த்தக நிலைய பெண் பணியாளரிடம் பணத்தை கோரிப் பெற்றுள்ளார்.
அவர் பணத்துடன் தப்பிச் சென்ற நிலையில் Solothurn பொலிசார் அவரை ரயில் நிலையம் ஒன்றில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, பணமும் கைப்பற்றப்பட்டது.
23 வயதான அந்த இளைஞன், கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மூலம்- 20min.

