சூரிச்சில் Bülach இல், உள்ள ஒரு தனி வீட்டில் இரண்டு பெண்களின் சடலங்களைப் பொலிசார் இன்று கண்டுபிடித்தனர்.
68 வயதுடைய சுவிஸ் பெண் மற்றும் 49 வயதுடைய அமெரிக்க பெண் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் இருந்த 72 வயதுடைய சுவிஸ் ஆணை பொலிசார் கைது செய்தனர்.
அவர் இரண்டு பெண்களையும் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய குற்றவாளி ஆகியோர் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- Bluewin