21.6 C
New York
Wednesday, September 10, 2025

ரயில் நிலையத்தில் ஒருவர் மயங்கி விழுந்து மரணம்.

St. Gallen மத்திய ரயில் நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் மயங்கிச் சரிந்து மரணமானார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7:15 மணியளவில்,  ரயில் நிலையத்தின்  4/5 நடைமேடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

60 வயதுடைய ஒருவர்  திடீரென சரிந்து விழுந்த  நிலையில்,  அங்கிருந்த இரண்டு பேர், உடனடியாக முதலுதவி அளித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் அவசர சேவையினர் வந்து உயிர்காப்பு முயற்சிகளை முன்னெடுத்தனர்.

ஆனால் இரவு 8 மணியளவில் அவர்கள், அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

நகர பொலிசார் பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி வளைத்தனர்.

​60 வயதுடை அந்த நபர் மருத்துவப் பிரச்சினையின் விளைவாக இறந்ததாக நம்பப்படுகிறது.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய, லகம் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

மூலம்- polizeinews.ch

Related Articles

Latest Articles