21.6 C
New York
Wednesday, September 10, 2025

பாடசாலை வெடிப்புக்கு காரணமானவர் இனங்காணப்பட்டார்.

Chur கன்டோனில் உள்ள  Giacometti பாடசாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு காரணமான மாணவன் இனங்காணப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பாடசாலை படிக்கட்டுகளில் மாணவர்கள் ஏறிக் கொண்டிருந்த போது, சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்ட பட்டாசு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டது.

அதிக சத்தத்துடனும் புகையுடனும் ஏற்பட்ட வெடிப்பினால் இரு மாணவிகள் காயம் அடைந்தனர்.

மேலும் 44 மாணவர்கள் அதிக சத்தம், புகையினால் அதிர்ச்சியடைந்த துடன், பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாகினர்.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தடை செய்யப்பட்ட பட்டாசை வெடிக்கவைத்த மாணவன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடம் இந்தச் செயலை செய்த நோக்கம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles