Unterägeri இல் உள்ள புகலிட மையத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
வியாழக்கிழமை, இரவு 8:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புகலிட மையத்தில் வசிக்கும் இருவருக்கு இடையே வாக்குவாதம் மோதலாக மாறியதாகவும், இதில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பொலிசார் தெரிவித்தனர்.
மோதலில், 28 வயதான ஈராக்கியர் ஒருவர் 31 வயதான அல்ஜீரியரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
கைகள் மற்றும் உடலில் வெட்டுக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட ஈராக்கியர் ஜுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மூலம் – 20 min.

