Staufen இல் குடியிருப்பு கட்டடம் ஒன்று நேற்றிரவு தீப்பற்றி எரிந்துள்ளது.
Neudörfli Street வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை Aargau கன்டோனல் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
நேற்றிரவு 8.20 மணியளவில் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
தொலைவில் இருந்தே நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்று பொலிசார் உறுதி செய்யவில்லை.
பாரிய வெடிப்பு சத்தம் ஒன்றை அடுத்தே தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எரிவாயு வெடிப்பினால் இது ஏற்பட்டிருக்கலாம் என ஒரு தகவல் கூறுகிறது.
மூலம்-20min