-0.9 C
New York
Thursday, January 1, 2026

அடுக்குமாடிக் குடியிருப்பினுள் நுழைந்து திருட முயன்ற சிறுமிகள் கைது.

அடுக்குமாடிக் குடியிருப்பினுள் நுழைந்து திருட முயன்ற இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Oberwiesenstrasse இல் வசிக்கும் ஒருவர், மாலை 5:15 மணியளவில்,  இரண்டு சிறுமிகள் பல்கனி வழியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏறுவதைக் கண்டதும், சூரிச் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

சீருடை அணிந்த ரோந்துப் படையினர் உடனடியாக சென்று கட்டடத்தைச் சுற்றி வளைத்தனர்.

ஒரு சிறுமி திறந்த ஜன்னல் வழியாக அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேற முயற்சித்த போது  கைது செய்யப்பட்டாள்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரண்டாவது சிறுமியை நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் 11 வயது இத்தாலிய சிறுமி  என்றும் மற்றவர், 13 வயது செர்பிய சிறுமி என்றும்,  இருவரும் சுவிட்சர்லாந்தில் நிரந்தர குடியிருப்பு இல்லாதவர்கள். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதே போன்ற பிற குற்றங்களுக்கும் அவர்கள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles