Staufen இல் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.
Aargau கன்டோனில் உள்ள Staufen இல் நேற்றிரவு 8.10 மணியளவில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
பலத்தவெடிப்பு சத்தத்துடன் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாக போராட நேரிட்டது.
இந்த தீவிபத்தை அடுத்து அங்கு வசித்த இரண்டு பேர் காணாமல் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்தை அடுத்து அருகில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மூலம்- 20min.