சுவிஸ் இராணுவத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு அதிகமான படையினர் ஒஸ்ரியாவிற்கு செல்லவுள்ளனர்.
ஒஸ்ரிய,ஜெர்மனி இராணுவங்களுடன் இணைந்து புத்தூக்கப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே சுவிஸ் இராணுவம் ஒஸ்ரியா செல்லவுள்ளது.
ஏப்ரல் 14ஆம் திகதி தொடக்கம் மே 19 ஆம் திகதி வரை இந்த கூட்டுப் பயிற்சி இடம்பெறவுள்ளது.
இதில் சுவிஸ் இராணுவத்தின் Mechanised பற்றாலியன் 14 தனது போர்த்தளபாடங்களுடன் பங்கேற்கிறது.
Leopard போர் டாங்கி உள்ளிட்ட பல கனரக வாகனங்கள் ரயில் மூலம் ஒஸ்ரியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
மூலம் – swissinfo