-2.7 C
New York
Wednesday, December 31, 2025

பெண்ணைத் தாக்கி படுகாயப்படுத்தியவர் உயிரை மாய்த்தார்.

Gerlafingen இல் உள்ள வீடு ஒன்றில், பெண்ணொருவரைத் தாக்கி கடுமையாக காயப்படுத்தி, ஒருவர் பின்னர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டதாக திங்கட்கிழமை காலை, 6.35 மணியளவில்,பொலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், அவசர மற்றும் மீட்பு சேவைகளின் ஒரு பெரிய குழு உடனடியாக அனுப்பப்பட்டது.

பலத்த காயமடைந்த 41 வயது பெண்ணும், ஏற்கனவே இறந்து விட்ட குற்றவாளியும் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மீட்பு சேவை மற்றும் ரெகா குழுவினரால் அந்தப் பெண்ணுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவர் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போதைய தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட செர்பியப் பெண்ணும், உயிரிழந்த 51 வயது கொசோவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles