Ballwil இல் உள்ள Hochdorfstrasse இல் ரயில் மோதி பாதசாரி ஒருவர் காயம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் S-Bahn (S9) ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த 29 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில், 144 அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால் Hochdorf மற்றும் Emmenbrücke Gersag இடையே ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு பயணிகள் பேருந்து மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூலம்- bluewin