Bruderholz மருத்துவமனைக்கு முன் 23 வயது இளைஞன் ஒருவர் வாயுத் துப்பாக்கியால் பலமுறை சுட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று மாலை 5.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டார்.
விரைந்து சென்ற பொலிசார், அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்திற்கான பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min.