பணக்கார கைதிகள் தங்களுடைய சிறைச்சாலைச் செலவுகளை தாங்களே ஈடுகட்ட வேண்டும் என்ற யோசனையை ஜெனிவா தேசிய கவுன்சிலர் Daniel Sormanni முன்வைத்துள்ளார்.
இந்த திட்டம் 150,000 பிராங்குகளுக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள கைதிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
வரி செலுத்துவோர் மீதான சுமையை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
பெடரல் கவுன்சில் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவுள்ளது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஒரு நாளைக்கு 300 முதல் 400 பிராங்குகள் வரை செலவாகும்.
இதனால், மாதத்திற்கு 10,000 பிராங்குகளுக்கு மேல் அரசாங்கத்துக்கு செலவு ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டே, SVP நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ஜெனீவா தேசிய கவுன்சிலர் Daniel Sormanni செல்வந்த கைதிகள் தங்கள் சொந்த சிறை மற்றும் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட வேண்டும் என்ற யோசனையை தேசிய கவுன்சிலில் சமர்ப்பித்துள்ளார்.
மூலம்- 20min