சூரிச் நோக்கிய மோட்டார் பாதையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்றுக்காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Lachen exit இற்கு முன்பாக காரில் இருந்து புகை வரத் தொடங்கியதும் அதில் இருந்தவர் உடனடியாக வெளியேறினார்.
காரில் ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 2 மணிநேரம் அந்தப் பாதை மூடப்பட்டது.
மூலம்- 20min

