27.8 C
New York
Monday, July 14, 2025

இலங்கையில் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவு.

இலங்கையில் சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் (CRD) கூற்றுப்படி, நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன.

குற்றப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2013இல் ஆரம்பமானது.

இந்த செயல்முறையின் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவு (CRD) தெரிவித்துள்ளது.

முக அங்கீகாரம் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் தொழில்நுட்ப செயல்முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles