Cham இல் உள்ள வானுயர்ந்த கட்டடம் ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Zug பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

வானுயர்ந்த கட்டடத்தின் மேலிருந்து இரண்டாவது தளமே தீப்பற்றி எரிந்தது.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
அந்த கட்டடத்தில் இருந்த ஏனையவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களை இன்று வெளியிடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.


