-2.9 C
New York
Thursday, January 1, 2026

காணாமல் போன மலையேறி- சடலத்தை காட்டிக்கொடுத்த அலைபேசி.

Alpstein region  பிராந்தியத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

St. Gallen கன்டோனை சேர்ந்த 33 வயதான ஒருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்ட இவர் Unterer Strich பிரதேசத்தில் மலையேறும் போது பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

அவர் காணாமல் போனமை குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் நேற்று அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போனவரின் அலைபேசி சமிக்ஞைகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட தேடுதலிலேயே சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles