24.6 C
New York
Monday, July 14, 2025

இலங்கை போர்க்குற்றவாளிகள் 4 பேருக்கு தடைவிதித்தது பிரிட்டன்.

இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ  தளபதிகள், முன்னாள் கடற்படை தளபதி மற்றும் கருணா ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராகவே பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக, பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பாரதூரமான உரிமை மீறல்கள், துஸ்பிரயோங்களில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் தமிழீழ விடுதலைப்பு லிகளின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களிற்கு  பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும்,தண்டனையின் பிடியில் இருந்து விலக்களிக்கப்படும் கலாசசாரத்தை தடுப்பதும் இதன் நோக்கம்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் இணைந்து பணியாற்றுவது குறித்து பிரிட்டன் அர்ப்பணிப்புடன் உள்ளது,தேசிய ஐக்கியம் தொடர்பான அவர்களின் அர்ப்பணிப்பை பிரிட்டன் வரவேற்கின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்காக நால்வருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் சிரேஸ்ட இராணுவ தளபதிகள், பின்னர் கருணா குழு என்ற துணைப்படைக்கு தலைமை தாங்கிய விடுதலைப்புலிகளிற்கு எதிராக இலங்கை இராணுவத்தின் சார்பில் செயற்பட்டவர்உட்பட நால்வருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.

போக்குவரத்து தடைகள், சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் அடங்கியுள்ளன. என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles