17.1 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்சில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்.

சூரிச்சின் Niederdorf நகரில் நடந்த கத்திக்குத்தில் 36 வயதுடைய ருமேனியர் ஒருவர் படுகாயமடைந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் ஒன்றை அடுத்து ருமேனியர் மீது மற்றவர் கத்தியால் குத்தியுள்ளார்.

தப்பிச் சென்ற குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

சூரிச் நகர காவல்துறை விசாரணையை அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கன்டோனல் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles