Koblenz இல் நேற்று மாலை கார் மோதி பாதசாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
85 வயது முதியர் ஓட்டிச் சென்ற கார், 72 வயதுடைய பாதசாரி மீது மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் பாதசாரி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Aargau பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மூலம்- 20min.