வருடாந்த பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் மாத தொடக்கத்தில் Gotthard சுரங்கப்பாதை Göschenen மற்றும் Airolo இடையே ஆறு இரவுகளுக்கு மூடப்படவுள்ளது.
மார்ச் 31 திங்கள்,முதல் ஏப்ரல் 4 வெள்ளி, வரையும், (நான்கு இரவுகள்) ஏப்ரல் 7 திங்கள், முதல் ஏப்ரல் 9, புதன் வரையும் (இரண்டு இரவுகள்) இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சுரங்கப்பாதை மூடப்படும் என ஊரி கன்டோன் அறிவித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்கு மாற்று பாதையாக, A13 இல் உள்ள சான் பெர்னார்டினோ சுரங்கப்பாதை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Bristenstrasse பாதையும், மார்ச் 31, 2025 திங்கள் முதல் ஏப்ரல் 4, 2025 வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும்.