Mörschwil இல் உள்ள Raiffeisen வங்கிக் கட்டடத்தில் உள்ள ஏடிஎம்மை இன்று அதிகாலை 3.40 மணியளவில் மர்மநபர்கள், வெடிக்கச் செய்துள்ளனர்.
குற்றவாளிகள் அடையாளம் தெரியாத வெடிபொருளைப் பயன்படுத்தியதாக சென் கலன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
வெடிப்பால் வங்கியின் உட்புறம் கடுமையாக சேதமடைந்தது.
இயந்திரத்தின் பல்வேறு சிறிய பாகங்கள் வெளியே பறந்தன.
குற்றவாளிகள் ஃபஹ்ர்ன்ஸ்ட்ராஸ்ஸை நோக்கி கால்நடையாக தப்பி ஓடி ஒரு வெள்ளை காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
ஏடிஎம்மில் தீ விபத்து மற்றும் புகை காரணமாக தீயணைப்புத் துறையினர் அழைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளை பிடிக்க சென் கலன் மற்றும் துர்காவ் கன்டோனல் பொலிசார் நடத்திய பெரியளவிலான தேடுதல் வேட்டை இதுவரை வெற்றியளிக்கவில்லை.
குற்றவாளிகள் ஏடிஎம்மில் இருந்து பணம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.