சென்டர் கட்சியைச் சேர்ந்த புதிய சுவிஸ் அரசாங்க அமைச்சர் மார்ட்டின் பிஸ்டரிடம், பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பை வயோலா ஆம்ஹெர்ட், கையளித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த வயோலா ஆம்ஹெர்ட், அமைச்சுக்களின் சாவிகளை புதிய பாதுகாப்பு அமைச்சரிடம் நேற்று வழங்கினார்.
திங்கட்கிழமை முதல், மார்ட்டின் பிஸ்டர் தற்போதைய ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவார்.
வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், அவர் ஏதேனும் புதிய நியமனங்களை அறிவிப்பார்.
மூலம்- swissinfo