30 வயதான Jonas Lauwiner தன்னை “சுவிட்சர்லாந்தின் மன்னர்” என்று அறிவித்துக் கொண்டுள்ளார்.
Jonas Lauwiner சுவிட்சர்லாந்து முழுவதும் கைவிடப்பட்ட சொத்துக்களை வாங்குகிறார்.
வாலாய்ஸில் பிறந்து இப்போது பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் Jonas Lauwiner, சுவிட்சர்லாந்து முழுவதும் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார்.
இப்போது அவர் நாடு முழுவதும் 149 சொத்துக்களை கொண்டுள்ளார்.
Burgdorf BE இல், பயிற்சி பெற்ற ஆட்டோமேஷன் பொறியியலாளரான அவர், தனது சொந்த கோட்டையில் வசிக்கிறார்.
ஒரு உண்மையான பேரரசருக்கு ஏற்றவாறு, Empire Vellar என்ற தனது சொந்த நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் ஒரு சீருடையையும் அணிய விரும்புகிறார்.
இந்த பொழுதுபோக்கு ஆட்சியாளர் தனது சொந்தக் கொடியை கூட வடிவமைத்துள்ளார்.
சமீபத்தில், அவர் ஸ்விஸ் மாகாணத்தில் 26 நிலங்களை கையகப்படுத்தியுள்ளார்.
இவை மொத்தம் 19,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.
ஸ்விஸ், மூட்டாதல், குஸ்னாச்ட் மற்றும் அன்டெரிபெர்க் நகராட்சிகளில் உள்ள நிலங்களும், ஆஸர்ஸ்விஸில் உள்ள ஏராளமான நிலங்களும் இதில் அடங்கும்.
இது உள்ளூர்வாசிகளுக்குப் பிடிக்கவில்லை.
உரிமையாளர் இல்லாத- கைவிடப்பட்ட நிலங்களை தேடிப் பிடித்து இவர் பதிவு செய்து அவர் இந்த உடைமைகளை வாங்கியுள்ளார்.
எந்தவொரு நபரும் அத்தகைய உரிமையாளர் இல்லாத நிலங்களை வாங்கலாம்.
இதற்காக நிலப் பதிவேட்டில் ஒரு இலகுவான பதிவு மட்டுமே போதுமானது.
அதிகாரப்பூர்வ செயலாக்கக் கட்டணமாக சில நூறு பிராங்குகள் செலுத்தினால் போதும்.
மூலம்-bluewin