ரஷ்யா ஒரு பெரிய போருக்கு தயாராகி வருவதாக ஐரோப்பிய புலனாய்வு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைனுக்கு அப்பால் ஐரோப்பாவில் போரை முன்னெடுப்பதற்காக ரஷ்யா தயாராகி வருகிறது என்று ஜெர்மனி இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய புலனாய்வுத்துறை நிறுவனங்களின் நிலைமை குறித்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்போது ரஷ்யா ஒரு பெரிய அளவிலான மரபுவழிப் போரை நடத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது என ஜெர்மன் பெடரல் புலனாய்வு சேவை (BND) “கிட்டத்தட்ட உறுதியாக” கருதுகிறது.
ஐரோப்பாவும் உக்ரைனும் அமைதியை நாடவில்லை என்று கிரெம்ளின் பலமுறை குற்றம்சாட்டி வரும் நிலையில், விளாடிமிர் புடின் தனது துருப்புக்களுக்கு உக்ரைன் “நசுக்கப்படும்” என்று தொடர்ந்து உறுதியளிக்கிறார்.
சாத்தியமான போர்நிறுத்தம் இருந்தாலும், இது எந்த வகையிலும் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பது புலனாய்வுத்துறை நிபுணர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.
உளவுத்துறை அறிக்கைகளின்படி, ரஷ்யா மேற்கு நாடுகளுடன் ஒரு “முறையான மோதலில்” தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு அப்பால் கூட அதன் ஏகாதிபத்திய இலக்குகளை இராணுவ ரீதியாகத் தொடரத் தயாராக உள்ளது.
தற்போது நேட்டோவுடன் உடனடி மோதலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும், அத்தகைய போருக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெறுகின்றன.
இதனால், ரஷ்யாவில் ஆயுத உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லிதுவேனிய புலனாய்வு சேவையின் அறிக்கையின்படி, பீரங்கி குண்டுகள், ரொக்கெட்டுகள், வெடிமருந்துகள் அனைத்தும் போதுமான அளவுகளில் மட்டுமல்ல, உக்ரைனில் போரின் தேவைகளை விட அதிகமாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எதிர்காலத்தில் போல்டிக் நாடுகள் பெரும்பாலும் ரஷ்ய தாக்குதல்கள் அல்லது படையெடுப்புகளுக்கு இலக்காக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிழக்கு ஐரோப்பாவின் படைகள் ஒப்பீட்டளவில் நன்கு ஆயுதம் ஏந்தியவை.
ஆனால் உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்பட்டால், அவர்கள் தற்போது உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும்அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மூலம்-bluewin