மியான்மாரில் நேற்று ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
றிக்டர் அளவுகோலில், 7.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 732 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், பெருமளவு பிரதேசம் அழிந்து போயிருப்பதாலும், போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையாலும், மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்படுவதால், அங்கு உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மியான்மார் இராணுவ ஆட்சியாளர் உலகம் முழுவதிலும் இருந்து உதவிகளைக் கோரியிருந்தாலும் பல நாடுகள் உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட மண்டலாய் மற்றும் யங்கூன் மாகாணங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்குள்ள நிலவரங்கள் வெளிவருவதிலும் மீட்புப் பணிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை மியான்மார் நில நடுக்கத்தினால் சுவிஸ் பிரஜைகள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.