பெர்னில் இருந்து சூரிச்சிற்கு குதிரைகளை ஏற்றிச் சென்ற வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
A1 நெடுஞ்சாலையில் Hindelbank அருகே இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குதிரையை ஏற்றிய வாகனத்தில் இருந்த சாரதியும், அதிலிருந்த இரண்டு குதிரைகளும் காயமின்றி தப்பியுள்ளனர்.
கரும்புகையுடன் எரிந்து கொண்டிருந்த நெருப்பினால் போக்குவரத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தீ அணைக்கப்பட்ட பின்னரே போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
மூலம்- 20min.