சுவிஸ் நகரமான Lausanneஇல் உள்ள டெஸ்லா கிளை வெள்ளிக்கிழமை இரவு வண்ணப்பூச்சுக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபது வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று அதிகாலை 5 மணியளவில் Lausanne நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
டெஸ்லா கிளையின் கடை ஜன்னலில் சிவப்பு வண்ணப்பூச்சு தெளிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் டெஸ்லா கடைகளுக்கு வெளியே பல வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
டெஸ்லா நிறுவுநர் எலோன் மஸ்க்கின் பணத்தால் ஜனநாயகத்தைத் தாக்குவதாக குற்றம்சாட்டி இந்தப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
சுவிட்சர்லாந்தில், டெஸ்லாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் பெரியளவில் உருவாகவில்லை என்றாலும், சனிக்கிழமை காலை சூரிச்சில் உள்ள டெஸ்லா கிளையின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
மூலம்- swissinfo